Friday, 15 July 2011

En Anbey....

Unnai naan en kangalil vaikavillai,
En idhayathil vaithu irukiren.
Aanal neeyo, Idhayathil irundhukondu
Kangalil kanneerai vara vaikiraay.!

சூழ்நிலைக் கைதி.......

குறும்புகள் தெறிக்கும்
குதுகல வார்த்தைகள்...
உனை சிலாகிக்க வைக்கும்
என் சில்மிஷங்கள்...
உன் மனதைத் திருடிய
என் எளிமைத் தனங்கள் என
என்னிடமிருந்து
எல்லாவற்றையும்
கற்றுக் கொண்டாய்..!
எனை ஏமாற்ற எங்கேயடி
கற்றுக் கொண்டாய்..?

நீதான் உலகமென இருந்தேன்..!
நீயோ உன் பெற்றோர் காட்டிய
உலகமே பெரிதென்று
எனை உதறிச் சென்று விட்டாய்..!
இல்லை... இல்லை...
எனைக் கொன்று சென்று விட்டாய்..!
என் வாழ்வில் கிடைத்த
மிகப் பெரிய இன்பமும் நீ...
மிகப் பெரிய துன்பமும் நீ..!

எனை நீ எளிதில் மறந்து விட்டாய்...
உன் மனதிலிருந்து எனை
எளிதில் மறைத்து விட்டாய்...
என்னால் அப்படி முடியவில்லையடி
உன்னுடைய ஒவ்வொரு நினைவுகளும்
என்னுள் மாறா ரணத்தை ஏற்படுத்துகிறது...
இது உனக்கு சாதாரணமாக இருக்கலாமடி
ஆனால் எனக்கோ இது சதா 'ரணம்'

இன்பத்தைப் பரிசளிப்பாய் என்றிருந்தேன்
மா ரணத்தை பரிசளிப்பாய் என
இந்த மதிகெட்டவனுக்கு புரியவில்லை
உன் நினைவுகள் என்னுள்
சாட்டையாய் இறங்குகிறது..!
அடித்த வலி தாங்கிக் கொள்வேன்..!
அடி மனதின் வலியை
எப்படித் தாங்க... எப்படித் தாங்க...?

காதலிக்கத் திரணி கொண்ட கன்னியரே
காளைகளை கரம் பிடிக்க மறுத்து
அவர்களின் சிரமறுப்பதேன்..?
காதலெனும் ஆயுதத்தால்
ஆணினத்தை வேரோடு
வீணழிப்பதேன்..?

பொல்லாதக் காதலால் வந்த வலியினை
வெளியில் சொல்லவும் முடியவில்லை
சொல்லாமலிருக்கவும் முடியவில்லை
வாய்விட்டு அழவும் முடியவில்லை
அழாமல் இருக்கவும் முடியவில்லை...
ஆனால் என் மனம் எப்போதும்
அழுது கொண்டேதான் இருக்கிறது...

சூழ்நிலைக் கைதியாக இருக்கும்
பெண்ணுலகமே...
காதல் என்ற கதாயுதத்தால்
என் போன்ற காளைகளை
காயப்படுத்தாதீர்கள்...
அக்காயம்... மரணத்தின் நீட்சி வரை
நீண்டு கொண்டே இருக்கும்..!
நீண்டு கொண்டே இருக்கும்..!

Thursday, 14 July 2011

Un Kaneer Thuligal.....



“Unmaiyaana anbukku mattumey
un kanneer thulligal theriyum.”.
“nee mazhaiyil nanaindhu kondey azhudhaalum kooda”..